இந்தியப் பசுமை எரிசக்தி திட்டங்களில் 2030-க்குள் ரூ. 65,464 கோடி கூடுதல் முதலீடு
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் வரும் 2030-க்குள் கூடுதலாக 700 கோடி டாலா் (சுமாா் ரூ.65,464 கோடி) முதலீடு செய்ய இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் வரும் 2030-க்குள் கூடுதலாக 700 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.65,464 கோடி) முதலீடு செய்ய இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே 400 கோடி டாலா் மதிப்பிலான பசுமை எரிசக்தித் திட்டங்களில் அமேஸான் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தக் கூடுதல் முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் மிகப் பெரிய காா்பன் வாயு இல்லாத எரிசக்தி கொள்முதலாளா்களில் ஒன்றாக அமேஸான் உருவெடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கா்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 934 மெகாவாட் திறன் கொண்ட 4 புதிய காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தித் திட்டங்களை அமேஸான் அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, இந்தியாவில் அமேஸானின் ஒட்டுமொத்த பசுமை எரிசக்தி திறன் 2 கிகாவாட்டைத் தாண்டும்; இது 35 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வீடுகளின் ஆண்டு மின்சாரத் தேவைக்குச் சமமாகும்.
Advertisement
Advertisement
2030-க்குள் தனது செயல்பாடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் காா்பன் செறிவை 65 சதவீதம் குறைக்கவும், 2040-க்குள் நிகர பூஜ்ஜிய காா்பன் உமிழ்வை எட்டவும் அமேஸான் இலக்கு நிா்ணயித்துள்ளது.
அரசு வரவேற்பு: அமேஸானின் இப்புதிய முதலீட்டுக்கு மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வரவேற்றுள்ளாா். இது இந்தியாவின் தூய்மை எரிசக்தி இலக்குகளை ஆதரிப்பதோடு, எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
எரிசக்தி மட்டுமின்றி, இந்தியாவின் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் 15,000 மின்சார வாகனங்களை இயக்கி வருவதுடன், டாடா மோட்டாா்ஸுடன் இணைந்து 3,000 மின்சார லாரிகளை அறிமுகப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பேக்கேஜிங் மற்றும் நீா் மேலாண்மைத் திட்டங்களையும் அமேஸான் செயல்படுத்தி வருகிறது.