தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்! வாழ்த்து வெளியிட்ட முத்தூட் ஃபின்கார்ப் இயக்குநர்!
தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு வாழ்த்து வெளியிட்ட முத்தூட் ஃபின்கார்ப் இயக்குநர்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு முத்தூட் ஃபின்கார்ப் இயக்குநர் தாமஸ் ஜார்ஜ் முத்தூட் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புதிய தேசிய வணிக நாளிதழான தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) அறிமுகம் செய்திருக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்.
புதிய தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர், எஸ்பிஐ தலைவர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தங்களது வாழ்துதுகளை வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
முத்தூட் ஃபின்கார்ப் இயக்குநர் தாமஸ் ஜார்ஜ் முத்தூட் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,
வணிக இதழியலில் (Business Journalism) நீங்கள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கொச்சியிலிருந்து வெளிவரும் ஒரு புதிய நிதிசார் நாளிதழ், இப்பகுதியில் உள்ள வணிகங்களுக்குக் கிடைத்த ஒரு மகத்தான வாய்ப்பாகும்.
உங்களது இந்த முயற்சிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம், நாட்டில் எந்த முறையில் வணிகம் செய்கிறோம் என்பது பற்றிய ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்ட செய்திகளை இந்த நாளிதழ் வாசகர்களுக்கு வழங்கும் என்று நம்புகிறேன்.
இந்தியா முழுவதும் உள்ள பல வளர்ந்து வரும் தொழில்முனைவோர், தங்கள் சாதனைகளை உங்கள் இதழின் பக்கங்களில் வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.