முகப்பு
வணிகம்

பரோடா வங்கியின் ‘கிசான் பக்வாடா’ திட்டத்தின் 9-ஆவது பதிப்பு தொடக்கம்

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, விவசாயிகளைச் சென்றடையும் தனது முதன்மைத் திட்டமான ‘பரோடா கிசான் பக்வாடா’-வின் 9-ஆவது பதிப்பைத் தொடங்கியுள்ளது.

27 நவம்பர் 2026, 1:28 am
பரோடா வங்கியின் ‘கிசான் பக்வாடா’ திட்டத்தின் 9-ஆவது பதிப்பு தொடக்கம்
பகிர்:

நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி, விவசாயிகளைச் சென்றடையும் தனது முதன்மைத் திட்டமான ‘பரோடா கிசான் பக்வாடா’-வின் 9-ஆவது பதிப்பைத் தொடங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை (நவ. 25) முதல் டிச. 10 வரை நாடு முழுவதும் நடைபெறும் இந்த இரண்டு வார கால முகாமில், வங்கியின் கிளைகள் வாயிலாக விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

மேலும், வேளாண் கடன் திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள் மற்றும் எண்ம வங்கிச் சேவைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் இதன்கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement