யூடியூபில் இனி அமேசான் பொருள்களை பரிந்துரை செய்யலாம்! எப்படி?
யூடியூபில் அமேசான் இணைய விற்பனை தளப் பொருள்களை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வது எப்படி என்பது குறித்து...
யூடியூபில் அமேசான் இணைய விற்பனை தளப் பொருள்களை மற்றவர்களுக்கு இனி பரிந்துரை செய்யும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, யூடியூப் சேனல் வைத்திருப்பவர் அல்லது விடியோ பதிவேற்றம் செய்பவர், தங்களை பின்தொடர்பவர்களுக்காக (ஃபாலோயர்ஸ்) அமேசான் பொருள்களை விடியோவில் பரிந்துரை செய்யலாம்.
இதற்கு முன்பு விடியோ கிரியேட்டர்கள், தங்கள் விடியோவின் டிஸ்கிரிப்ஷனில் மட்டுமே பொருள்களை வாங்குவதற்காக லிங்க்கை பகிர முடியும். பயனர்கள் அந்த லிங்கை கிளிக் செய்து பொருள்களின் விவரங்களைப் பார்வையிட முடியும்.
Advertisement
Advertisement
தற்போது விடியோவிலேயே பொருள்களின் படத்தை டேக் செய்ய முடியும். அப்படத்தை கிளிக் செய்தாலே அமேசான் இணையதள விற்பனைப் பக்கத்திற்குச் செல்லும். இதனால் எளிதில் பயனர்களிடம் பொருள்களை விற்பனை செய்ய முடியும்.
எப்படி செய்யலாம்?
யூடியூப்பில் ஷாப்பிங் அஃபிலியேட் திட்டம் (YouTube Shopping Affiliate Program) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை கிளிக் செய்வதன் மூலம் விடியோ கிரியேட்டர்கள் தங்களின் விடியோக்களில் அமேசான் தயாரிப்புகளை நேரடியாக டேக் செய்யும் வசதியை யூடியூப் வழங்குகிறது.
இந்த வசதி 2026 ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு, செப்டம்பர் 2026 ஆம் ஆண்டு நடந்த இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
You can now recommend Amazon products on YouTube! How
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.