FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ. 96.26 ஆக நிறைவடைந்தது.

கோப்புப் படம்
பகிர்:

மும்பை: இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் விற்பனை உள்ளிட்டவையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ரூ. 96.26 ஆக நிறைவு பெற்றது.

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி மேற்கொண்ட டாலர் விற்பனை உதவியதாக இருந்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் டாலரின் வலுவான நிலை ஆகியவற்றால் இந்த தாக்கம் தொடர்ந்து.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பு ரூ. 96.20 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 96.26 ஆக சரிந்தது. இது முந்தைய வர்த்தக நாளின் முடிவான ரூ. 96.25 லிருந்து ஒரு காசு குறைவாகும்.

Advertisement

Advertisement

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று அந்நியச் செலாவணி மற்றும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

summary

The Indian rupee remained under pressure against the US dollar in early trade on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments