ஆர்பிஐ வட்டி உயர்வு: 2-ம் நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி! ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
இந்த வாரத்தில் முதல் 2 நாள்கள் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தியதால் நேற்று (அக். 7) பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.
தொடர்ந்து இன்றும் (அக். 8) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக பொருளாதாரம் உள்ளிட்டவையும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாக கூறப்படுகின்றன.
Advertisement
Advertisement
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,668.00 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை சரிந்தது. காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 428.99 புள்ளிகள் சரிந்து 72,209.71 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 147.50 புள்ளிகள் சரிந்து 22,455.55 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
நிஃப்டி50-ல் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.
துறை வாரியாக, நிஃப்டி ஐடி பங்குகள் உயர்ந்தன. அதே நேரத்தில் நிஃப்டி ரியல் எஸ்டேட் பங்குகள் கணிசமாக சரிந்தன. எண்ணெய் மற்றும் எரிவாயு, நிதிச் சேவைகள் மற்றும் நுகர்வோர் பொருள்கள் ஆகிய துறைகளும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
சென்செக்ஸ் 30 பங்குகளில் டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல், இன்போசிஸ், டைட்டன், சன் பார்மா ஆகிய 6 பங்குகள் மட்டும் உயர்ந்தும் மற்ற பங்குகள் சரிந்து வர்த்தகமாகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.55 டாலராக உள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 102.31 டாலராக உள்ளது.
Stock Market LIVE: Sensex falls 400 pts, Nifty around 22,450
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.