சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் 'ஜெமினி 4 ஆர்கான்' ஏஐ மாடல்!
கூகுளின் 'ஜெமினி 4 ஆர்கான்' ஏஐ மாடல் பற்றி...
சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு 'ஜெமினி 4 ஆர்கான்' என்ற செய்யறிவு (ஏஐ) மாடலை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சைபர் பாதுகாப்புத் தற்காப்பு ஆகியவற்றில் உள்ள சிக்கலான ஆய்வுகளில் முன்னணி செயல்திறனை வழங்குகிறது.
அதாவது ஜெமினி 4 ஆர்கானை பயன்படுத்தும்போது ஏதேனும் சைபர் தாக்குதல்கள் ஏற்பட்டால் அதுவே சரிசெய்யும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஏஐ மாடல் சைபர் தாக்குதல்கள் போன்ற மென்பொருள் பாதிப்புகள் ஏற்பட்டால் அதனைக் கண்டறிந்து சரி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சைபர் தாக்குதல்களுக்கு எதிரான வலுவான வழிமுறைகள் மற்றும் உடனடி சைபர் தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்புத்திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் நினைவகத் திறன் 300 TiB-க்கும் அதிகமாக உள்ளது. ஜெமினி 4 ஆர்கான் மாடலின் வெளியீட்டு டோக்கன் வரம்பை 64,000 -லிருந்து, ஒரு மில்லியன் (10 லட்சம்) டோக்கன்களாக அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது.
இது ஏஐ உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Gemini 4 Argon with cybersecurity defense capabilities
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.