ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி: தங்கம் விலை மீண்டும் உயர்வு!
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவுக்கு முன்னதாக, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தபோதிலும், ரூபாயின் மதிப்பு சரிந்ததால் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.46 லட்சமாக மீண்டது.
புதுதில்லி: அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கொள்கை முடிவுக்கு முன்னதாக, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை சரிந்த போதிலும், ரூபாயின் மதிப்பு சரிந்ததால் புதுதில்லியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.700 உயர்ந்து ரூ.1.46 லட்சமாக மீண்டது.
உள்ளூரில் 99.9 சதவீதம் தங்கம் 10 கிராமுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.1,46,500 ஆக உள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) 10 கிராமுக்கு ரூ.1,45,800 ஆக முடிவடைந்தது. இருப்பினும், வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.1.98 லட்சமாக இருந்தது.
வலுவடைந்து வரும் டாலர் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை, ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.95.28 ஆக உள்ள நிலையில், தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்தது. இதன் காரணமாக, சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை பலவீனமாக இருந்தபோதிலும், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலைக்கு ஆதரவு கிடைத்ததாக நிலை ஏற்பட்டது.
Advertisement
Advertisement
உலகளாவிய சந்தைகளில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸு ஒன்றுக்கு 14.05 டாலர் சரிந்து 4,046.28 அமெரிக்க டாலராகவும், வெள்ளியின் விலை 1.23 சதவீதம் சரிந்து அவுன்ஸு ஒன்றுக்கு 53.75 டாலராக குறைந்தது.
சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், ஸ்பாட் தங்கம் அவுன்ஸு ஒன்றுக்கு சுமார் 4,040 அமெரிக்க டாலராக உள்ளது.
Gold prices rebounded by Rs 700 to Rs 1.46 lakh per 10 grams on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.