FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒருமுறை சார்ஜ் செய்தால் 243 கி.மீ. மைலேஜ்! ரூ. 1 லட்சத்தில் அசத்தல் மின்சார ஸ்கூட்டர்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 243 கி.மீ. மைலேஜ் தரும் புதிய மின்சார இருசக்கர வாகனம் குறித்து...

3 செப்டம்பர் 2026, 5:19 pm IST
சிம்பிள் வேவ் - படம் / நன்றி - சிம்பிள் என்ர்ஜி
பகிர்:

ஒருமுறை சார்ஜ் செய்தால் 243 கி.மீ. மைலேஜ் தரும் வகையில் புதிய மின்சார இருசக்கர வாகனத்தை சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிம்பிள் எனர்ஜி நிறுவனம், ஸ்போர்ஸ் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது குடும்பப் பயன்பாட்டிற்கான இருசக்கர வாகனங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில் இன்று வேவ் (Wave), வேவ் பிளஸ் (Wave+), வேவ் எஸ் (Wave S) என 3 மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. அதிகபட்சமாக 5 கிலோவாட் வரையிலான பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று 4 விதமான பேட்டரி பேக்கப் உடன் இந்த ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சிம்பிள் வேவ் அறிமுக விழா

5 கிலோ வாட் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 243 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகம் வரை செல்லக்கூடியவை.

இவற்றில் பொருத்தப்பட்டுள்ள 6.4 கிலோ வாட் மோட்டார், 179என் எம் டார்க் விசையை வழங்கக்கூடியது. இதனால் 3 விநாடிகளில் 40 கி.மீ. வேகத்தை எட்ட முடியும்.

அடுத்தபடியாக 3.7 கிலோவாட் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 171 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இதற்கு 6.4 கிலோவாட் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கும் அடுத்தபடியாக 2.7 கிலோ வாட் பேட்டரி வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 132 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இதற்கு 4.5 கிலோ வாட் மோட்டார் பயன்படுத்தப்படுகிறது.

சீட்டிற்கு கீழே 63 லிட்டர் கொள்ளளவு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட புட்ரெஸ்ட் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மி.மீ. ஆக உள்ளது. இருக்கை உயரம் 775 மி.மீ.. இருக்கையின் நீளம் 920 மி.மீ.,

பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்ய 2.15 மணி நேரம் ஆகும் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் கூறுகிறது. இதற்காக 750 வாட் சார்ஜர் கொடுக்கப்படுகிறது.

summary

243 km range on a single charge! An impressive electric scooter for ₹1 lakh simple wave

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments