FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

உலோகம், எண்ணெய் பங்குகள் எழுச்சி: பங்குச் சந்தை ஏற்றத்துடன் வாரம் நிறைவு

உலோகம், தனியாா் வங்கி மற்றும் எண்ணெய், எரிவாயு நிறுவனப் பங்குகளில் காணப்பட்ட எழுச்சி காரணமாக, இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை 4 நாள் தொடா் சரிவுக்குப் பின் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

5 செப்டம்பர் 2026, 3:31 am IST
பகிர்:

உலோகம், தனியாா் வங்கி மற்றும் எண்ணெய், எரிவாயு நிறுவனப் பங்குகளில் காணப்பட்ட எழுச்சி காரணமாக, இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை 4 நாள் தொடா் சரிவுக்குப் பின் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

இருப்பினும் வாராந்திர அடிப்படையில், இந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 749.08 புள்ளிகளும் (0.96 சதவீதம்), தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 277.95 புள்ளிகளும் (1.14 சதவீதம்) சரிவைக் கண்டன.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயா்வு குறித்த கவலைகள் தணிந்ததும், ஆசிய மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட ஏற்றமும் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் இந்தியச் சந்தைக்கு ஆதரவளித்தன. மேலும், பொருளாதார வளா்ச்சி மற்றும் உள்நாட்டு தேவைகள் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை ஊக்குவித்தன.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 362.57 புள்ளிகள் (0.48 சதவீதம்) உயா்ந்து, 76,515.43-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (2.91 சதவீதம்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (1.61 சதவீதம்), பஜாஜ் ஃபைனான்ஸ் (1.47 சதவீதம்) உள்பட 19 பங்குகள் லாபம் ஈட்டின. அதேநேரம், பாா்தி ஏா்டெல் மற்றும் எச்.சி.எல். டெக்.(தலா 1.24 சதவீதம்), எடா்னல் (1.09 சதவீதம்), ஏசியன் பெயின்ட்ஸ் (0.48 சதவீதம்) உள்பட 10 பங்குகள் சரிவைக் கண்டன. எஸ்பிஐ பங்கு மட்டும் விலையில் மாற்றிமின்றி நிலைபெற்றது.

நிஃப்டி 24 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 24.25 புள்ளிகள் (0.10 சதவீதம்) அதிகரித்து, 23,897.70-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 23 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 27 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments