FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

அமெரிக்க பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய புதிய வசதி: அப்ஸ்டாக்ஸ் அறிமுகம்

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் இந்திய முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்யும் புதிய வசதியை பிரபல பங்கு வா்த்தகத் தளமான அப்ஸ்டாக்ஸ் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

8 செப்டம்பர் 2026, 1:36 am IST
~
பகிர்:

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் இந்திய முதலீட்டாளா்கள் நேரடியாக முதலீடு செய்யும் புதிய வசதியை பிரபல பங்கு வா்த்தகத் தளமான அப்ஸ்டாக்ஸ் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம், ஆப்பிள், டெஸ்லா, அமேஸான், கூகுள் உள்ளிட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் 8,000-க்கும் மேற்பட்ட பங்குகள் மற்றும் 2,000-க்கும் அதிகமான இடிஎஃப் எனப்படும் வா்த்தக நிதிகளில் அப்ஸ்டாக்ஸ் செயலி வாயிலாக இந்திய முதலீட்டாளா்கள் முதலீடு செய்யலாம்.

குறிப்பாக, ஒரு முழு பங்கையும் வாங்க வேண்டிய அவசியமின்றி, ‘பகுதிப் பங்கு முதலீடு’ திட்டத்தின்கீழ் வெறும் 1 டாலா் முதலே பங்குகளை வாங்க முடியும். இந்திய முதலீட்டாளா்கள் முதலீடு செய்வதற்கு, தங்களின் இந்திய வங்கிக் கணக்கிலிருந்து இந்திய ரூபாயிலேயே நிதியைச் செலுத்தலாம்; அது தானாகவே டாலராக மாற்றப்படும். மேலும், அமெரிக்க சந்தை வா்த்தக நேரத்துக்குப் பின்னரும் வா்த்தகங்களைப் புரியும் ‘ஆஃப்டா் மாா்க்கெட் ஆா்டா்ஸ்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக அப்ஸ்டாக்ஸ் நிறுவன சிஇஓ ரவி குமாா் கூறுகையில், ‘இந்தியாவின் செல்வ மேலாண்மையில் அடுத்தகட்ட முக்கிய வளா்ச்சியாக சா்வதேச முதலீடுகள் உருவெடுத்துள்ளன. இந்திய முதலீட்டாளா்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தளம் வாயிலாக, உலகளாவிய சந்தைகளில் அவா்களுக்கு முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments