FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரடியின் ஆதிக்கத்திலும் ஏற்றம் கண்ட ஐடி நிறுவனப் பங்குகள்!

ஒட்டுமொத்த பங்குச் சந்தை மந்தமாக இருந்த போதிலும், எச்சிஎல் டெக், ஹெக்ஸாவேர் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனப் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை உயர்ந்தன.

15 செப்டம்பர் 2026, 11:18 pm IST
பகிர்:

புதுதில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் குறையக்கூடும் என்ற கருத்துகளின் அடிப்படையில், ஐடி சேவையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த அச்சம் தணிந்ததால், ஒட்டுமொத்த பங்குச் சந்தை மந்தமாக இருந்த போதிலும், எச்சிஎல் டெக், ஹெக்ஸாவேர் மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனப் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில், எச்சிஎல் டெக் பங்குகள் 3.98 சதவீதமும், ஹெக்ஸாவேர் பங்குகள் 3.97 சதவீதமும், இன்ஃபோசிஸ் 3.64 சதவீதமும், டெக் மஹிந்திரா 2.31 சதவீதமும், டிசிஎஸ் நிறுவனம் 2.18 சதவீதமும், விப்ரோ 1.40 சதவீதமும் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் ஐடி குறியீடு 1.87 சதவீதம் உயர்ந்து 28,342.39 புள்ளிகளை எட்டியது.

Advertisement

Advertisement

கரடியின் ஆதிக்கத்திலும், தகவல் தொழில்நுட்ப பங்குகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தின.

summary

IT stocks surged on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments