இந்தியாவில் கிளவுட் சேவை விரிவாக்கம்: ஹைதராபாத்தில் காலடி பதித்த மைக்ரோசாப்ட்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹைதராபாத்தில் 4வது கிளவுட் மண்டலத்தை முறைப்படி அறிமுகப்படுத்தியது.
புதுதில்லி: நாட்டின் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பிற்காக 20.5 பில்லியன் டாலர் முதலீடு உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று ஹைதராபாத்தில் 4வது கிளவுட் மண்டலத்தை முறைப்படி அறிமுகப்படுத்தியது.
ஆகஸ்ட் 6 ஆம் தேதியன்று பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த கிளவுட் சேவை மையமானது புனே, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் ஏற்கனவே உள்ள நிறுவனங்களுடன் இணையும்.
இந்த சேவை மையத்தில், நீர் அடிப்படையிலான அமைப்புகளுக்குப் பதிலாக, காற்று மூலம் குளிர்விக்கப்படும் முறையை நம்பி உள்ளது. ஹைதராபாத் மையத்தில் குளிரூட்டலுக்கு தண்ணீரைப் பெருமளவில் பயன்படுத்துவதில்லை என்று மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் தெற்காசியத் தலைவர் புனீத் சந்தோக் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கனவே 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் சுமார் 2 ஜிகாவாட் தரவு மையத் திறன் உள்ள நிலையில், இது 2035-க்குள் 6 முதல் 7 ஜிகாவாட்டாக உயரும்.
இந்தியா தனக்காக மட்டுமல்லாமல், ஆசியா மற்றும் உலகளாவிய தெற்குப் பகுதிகளுக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மையமாக உருவெடுக்கும் என்றார்.
Microsoft on Monday launched its fourth India cloud region, in Hyderabad.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.