FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கறை, துரு, கீறல் ஏற்படுவது குறைவு! பானாசோனிக் மைக்ரோவேவ் ஓவன் அறிமுகம்!

பானாசோனிக் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைக்ரோவேவ் ஓவன் குறித்து...

23 செப்டம்பர் 2026, 5:59 pm IST
மைக்ரோவேவ் ஓவன் - படம் / நன்றி - பானாசோனிக்
பகிர்:

பானாசோனிக் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைக்ரோவேவ் ஓவன், கறை, துரு, கீறல் ஏற்படுவது வெகுவாகக் குறையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பானாசோனிக் நிறுவனத்தின் தயாரிப்புகள், இந்திய பயனர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது.

அந்தவகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மைக்ரோவேவ் ஓவன் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

அடிக்கடி சமைப்பதற்கும், உணவை சூடாக்குவதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பனிக்கட்டியை உருக்குவது, உணவை மீண்டும் சூடாக்குவது, சமைப்பது என எந்தவொரு செயலைச் செய்தாலும் எளிமையான முறையில் முடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

85 வகையான உணவுகளை தானியங்கியாகவே (ஆட்டோ-குக்) சமைக்கும் திறன் உடையது.

நீராவி மூலம் உட்புறத்தில் படித்த எண்ணெய்க் கறை, உணவுக் கறைகளை எளிதில் நீக்கக் கூடியது. இதற்கு ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்.

ஓராண்டு உத்தரவாதத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 9,900. பானாசோனிக் நிறுவன இணையதளப் பக்கத்தில் 17% தள்ளுபடியுடன் ரூ. 8,190 க்கு விற்கப்படுகிறது.

summary

Stains, rust, and scratches are less likely to occur 25L Solo Microwave Oven

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments