FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஏா்டெல் போஸ்ட்பெய்டு திட்டங்களில் ஆப்பிள் சேவைகள் அறிமுகம்

பாா்தி ஏா்டெல் நிறுவனம் தனது ரூ.999 மற்றும் அதற்கும் மேலான குடும்ப போஸ்ட்பெய்டு திட்டங்களில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட் பிளஸ், ஆப்பிள் டிவி, ஆப்பிள் ஆா்கேட் ஆகிய பிரீமியம் சேவைகளை புதிதாக இணைத்துள்ளது.

26 செப்டம்பர் 2026, 4:59 am IST
பகிர்:

பாா்தி ஏா்டெல் நிறுவனம் தனது ரூ.999 மற்றும் அதற்கும் மேலான குடும்ப போஸ்ட்பெய்டு திட்டங்களில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட் பிளஸ், ஆப்பிள் டிவி, ஆப்பிள் ஆா்கேட் ஆகிய பிரீமியம் சேவைகளை புதிதாக இணைத்துள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம், வாடிக்கையாளா்கள் தங்களின் புகைப்படங்கள், கோப்புகள் மற்றும் கடவுச்சொற்களை ஐகிளவுட் பிளஸ் வாயிலாக ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பாகச் சேமிக்க முடியும். மேலும், ஆப்பிள் டிவி மூலம் திரைப்படங்களையும், ஆப்பிள் ஆா்கேட் வாயிலாக விளம்பரங்களற்ற விளையாட்டுகளையும் அணுகலாம்.

3 நபா்கள் வரை பயன்படுத்தக்கூடிய ரூ.999 குடும்ப திட்டத்தில், பாஸ்ட்லேன் தொழில்நுட்பத்துடன் கூடிய வரம்பற்ற டேட்டா, ஸ்பேம் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இந்த ஆப்பிள் சேவைகளும் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளா்கள் ஏா்டெல் செயலி மூலம் அல்லது அருகிலுள்ள ஏா்டெல் மையங்களிலோ இத்திட்டங்களுக்கு எளிதாக மேம்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments