ரூ. 649-க்கு ஜியோ ரீசார்ஜ் திட்டம்! அளவற்ற அழைப்புடன் ஹாட்ஸ்டார் ஓடிடி இலவசம்!
ஜியோவில்ல் புதிதாக போஸ்ட்பெய்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
ஜியோ நிறுவனத்தில் புதிதாக போஸ்ட்பெய்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 649-க்கு அளவற்ற அழைப்புகளுடன் ஹாட்ஸ்டார் ஓடிடி பயன்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது.
போஸ்ட்பெய்டு திட்டத்தில் அளவற்ற அழைப்பு, இணையப் பயன்பாடு, பொழுதுபோக்கு அம்சங்கள் வேண்டும் என நினைப்போருக்கு ரூ. 649 திட்டம் சிறந்ததாக இருக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. இந்த மாதாந்திர திட்டத்தில் இலவச குறுஞ்செய்தி அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது முற்றிலுமாக தனிப்பட்ட நபருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள முடியாது. தனிப்பட்ட போஸ்ட்பெய்டு திட்டத்தில் அளவற்ற பயன்பாட்டை விரும்புவோருக்கு இந்த திட்டம் ஏற்றது.
ரூ. 649-க்கு ரீசாஜ் செய்தால் அளவற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக எந்தவொரு ரீசார்ஜும் தேவையில்லை.
இத்துடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி பயன்பாடு இலவசமாக வழங்கப்படுகிறது. போஸ்ட்பெய்டு திட்டம் பயன்படுத்தப்படும் சிம் கார்டு எண்ணைக் கொடுத்து ஓடிபியை உள்ளீடு செய்வதன் மூலம் ஹாட்ஸ்டாரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்துடன் ஜியோ ஏஐ கிளவுட் வழங்கப்படுகிறது. இதன்முலம் ஜியோவில் உள்ள மற்ற பயன்பாடுகளான ஜியோ நியூஸ் போன்றவற்றை பயனர்களால் பயன்படுத்த முடியும். ஏஐ கிளவுட்டில் சேமித்து வைத்துக்கொள்ளும் பொருட்டு 50ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் புகைப்படங்கள், விடியோக்கள், கோப்புகளை இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். வேண்டிய சமயங்களில் அதில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என ஜியோ தெரிவித்துள்ளது.