முகப்பு
யுபிஎஸ்சி

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகள் எவை?

இந்திய குடிமக்களின் அடிப்படை கடமைகள் குறித்து...

Updated On : 15 ஏப்ரல் 2026, 5:42 pm IST
பகிர்:

இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளதைப் போன்று, அவர்களுக்கென சில அடிப்படி கடமைகளையும் குறிப்பிட்டுள்ளது.

அடிப்படை கடமைகள் (Fundamental Duties) என்பது இந்திய குடிமக்கள் கடைபிடிக்க வேண்டிய பொறுப்புகள் ஆகும். இவை 42வது அரசியலமைப்பு திருத்தம் 1976 மூலம் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன.

அரசியலமைப்பின் பகுதி IV-A, Article 51A-இல் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. முதலில் 10 கடமைகள் இருந்தன. பின்னர், 86வது அரசியலமைப்பு திருத்தம் 2002 மூலம் 11-வது கடமை சேர்க்கப்பட்டது.

Advertisement

Advertisement

அடிப்படை கடமைகள்

(a) அரசியலமைப்பை பின்பற்றி, அதன் கோட்பாடுகளையும் நிறுவனங்களையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும்.

(b) நமது நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துதலாக இருந்த உயரிய இலட்சியங்களைப் போற்றியும் பின்பற்றியும் இருக்க வேண்டும்.

(c) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தியும் பாதுகாத்தும் இருக்க வேண்டும்.

(d) நாட்டை பாதுகாக்க அழைக்கப்படும்போது தேசிய சேவையை வழங்க வேண்டும்.

(e) இந்தியாவின் அனைத்து மக்களிடையிலும் மதம், மொழி, பகுதி அல்லது பிரிவு வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையும் சகோதரத்துவ உணர்வையும் வளர்த்தல்; பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் பழக்கங்களைத் துறத்தல்.

(f) நமது ஒருங்கிணைந்த கலாச்சாரத்தின் செழுமையான பாரம்பரியத்தை மதித்து பாதுகாத்தல்.

(g) காடுகள், ஏரிகள், நதிகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை பாதுகாத்து மேம்படுத்துதல்; உயிருள்ள அனைத்து உயிரினங்களிடமும் இரக்கம் கொள்வது.

(h) அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், மேலும் ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்த்தல்.

(i) பொது சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் வன்முறையைத் தவிர்த்தல்.

(j) தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலம் அனைத்து துறைகளிலும் மேன்மையை அடைய பாடுபட்டு, நாட்டை சாதனைகளை நோக்கி முன்னேறச் செய்வது.

(k) பெற்றோர் அல்லது பாதுகாவலர், தன் குழந்தைக்கு அல்லது தேவையானபட்சத்தில் தன் பாதுகாப்பில் உள்ளவருக்கு, ஆறு முதல் பதினான்கு வயதுக்குள் கல்வி பெறும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

summary

Regarding the Fundamental Duties of Indian Citizens...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.