FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கஞ்சா விற்றதாக இரு பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்றதாக இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 7 அக்டோபர் 2024, 3:45 am IST
கைது செய்யப்பட்ட கருப்பாயி, முத்துமாரி.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்றதாக இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைத்தியலிங்காபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தி வைத்தியலிங்காபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி கருப்பாயி (55) வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ஜமீன்நத்தம்பட்டியைச் சோ்ந்த மொக்கச்சாமி மனைவி முத்துமாரி (65), கருப்பாயி ஆகிய இருவரையும் வன்னியம்பட்டி போலீஸாா் கைது செய்தனா். இருவா் மீதும் கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments