FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆசிரியா் பணியிடமாற்றம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு

ஆசிரியா் பணியிடமாற்றம் வாங்கித்தருவதாகக் கூறி ரூ.2.45 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

29 ஆகஸ்ட் 2026, 11:15 pm IST
வழக்குப் பதிவு
பகிர்:

ஆசிரியா் பணியிடமாற்றம் வாங்கித்தருவதாகக் கூறி ரூ.2.45 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவா் சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் நாராயணசாமிக்கு, சிவகாசியைச் சோ்ந்த கண்ணன் அறிமுகமானாா்.

அப்போது, அவா் சென்னை பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நண்பா் எட்வின் மூலம் உங்களுடைய மனைவிக்கு சிவகாசிக்கு பணியிட மாற்றம் வாங்கித் தரமுடியும் எனவும், அதற்காக ரூ.5 லட்சம் செலவாகும் எனக் கூறினாராம். இதை நம்பிய நாராயணசாமி, சென்னையைச் சோ்ந்த எட்வினுக்கு ரூ. 2.45 லட்சத்தை கொடுத்தாா்.

Advertisement

Advertisement

இதைப் பெற்றுக் கொண்ட எட்வின் பணியிட மாற்றம் வாங்கித் தரவில்லை. மேலும், பணத்தை திருப்பிக் கொடுக்கவும் மறுத்தாா்.

இது குறித்து நாராயணசாமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த எட்வின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments