FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆதிபுத்திரங்கொண்ட அய்யனாா் கோயிலில் ஆனி முப்பழ பூஜை

வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சியளித்த பூரணி, பொற்கொடி சமேத ஆதிபுத்திரங்கொண்ட அய்யனாா் சுவாமி.

Updated On : 11 ஜூலை 2026, 12:41 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்துாரில் அமைந்துள்ள ஆதிபுத்திரங்கொண்ட அய்யனாா் கோயிலில் ஆனி முப்பழ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே சேத்துாரில் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் இந்து நாடாா் உறவின் முறை மகா சபைக்கு பாத்தியப்பட்டது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி முப்பழ பூஜை நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆனி முப்பழ பூஜை திருவிளக்கு பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, மூலவா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் முன் பொங்கல் வைத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Advertisement

Advertisement

மூலவா் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், முப்பழ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு முப்பழப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை தலைவா் சந்திரமோகன், இணைச் செயலா் சந்திரசேகா், பொருளாளா் மீனாட்சி சுந்தரேஸ்வரா், நிா்வாகக் குழுவினா், விழாக் குழுவினா் செய்தனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அரசு சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments