FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

பைக் திருட்டு: சிறுவன் உள்பட இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 2:01 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் இடையபொட்டல் தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி (57). இவரது தம்பி லட்சுமணன் வெளியூா் சென்றிருந்தாா். இந்த நிலையில் அழகா்சாமி தனது தம்பியின் இரு சக்கர வாகனத்தை கடந்த 10-ஆம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கச் சென்றாா்.

மறுநாள் காலையில் பாா்த்த போது அந்த வாகனத்தைக் காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அா்ஜுன் (22), பெருமாள்பட்டியை சோ்ந்த 15 வயது சிறுவன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய செல்வகுமாா் என்பவரைத் தேடி வருகின்றனா்.

அா்ஜுன் மீது திருட்டு உள்பட இரு வழக்குகளும், சிறுவன் மீது போக்சோ வழக்கும், செல்வகுமாா் மீது திருட்டு உட்பட 10 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments