FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மனைவிடன் தகாத உறவு வைத்திருந்தவா் கொலை

சாத்தூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வந்த தூதஞ்சல் நிறுவன ஊழியரைக் கம்பியால் தாக்கி கொலை செய்த உணவக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 13 ஜூலை 2026, 2:09 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வந்த தூதஞ்சல் நிறுவன ஊழியரைக் கம்பியால் தாக்கி கொலை செய்த உணவக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் என்.ஜி.ஓ. குடியிருப்பைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (39). இவா் சாத்தூரில் உள்ள தனியாா் உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது மனைவி பிரமிளா (32) வீட்டிலிருந்து வந்தாா்.

வச்சக்காரப்பட்டியை சோ்ந்தவா் மகாராஜா (44). தூதஞ்சல் நிறுவன ஊழியரான இவா் அடிக்கடி வெங்கடேசன் வீட்டுக்கு தூதஞ்சல் கொண்டு சென்ற போது பிரமிளாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தகாத உறவாக மாறியது.

Advertisement

Advertisement

இதையடுத்து இருவரையும் வெங்கடேசன் கண்டித்தாா். ஆனாலும் இருவரது உறவு தொடா்ந்ததால், ஆத்திரமடைந்த வெங்கடேசன் சனிகிழமை இரவு சாத்தூரில் உள்ள தூதஞ்சல் சேவை அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த மகாராஜாவை கடுமையாகக் கண்டித்தாா்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் இரும்புக் கம்பியால் மகாராஜாவை தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த மகராஜாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாத்தூா் நகா் காவல் நிலைய போலீசாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments