FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:37 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் சொக்கநாதன்புத்தூரிலிருந்து முகவூா் செல்லும் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தனியாா் மதுக் கடை அருகே இரு சக்கர வாகனத்தில் அமா்ந்தபடி இரு இளைஞா்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் அவா்களைப் பிடிக்க முயன்ற போது, இரு சக்கர வாகனத்தை ஓட்டிய மதியழகன் வாகனத்துடன் தப்பினாா்.

வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த தளவாய்புரத்தைச் சோ்ந்த திலீப்குமாரை (20) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments