FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கண்மாயில் முழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை கண்மாய் நீரில் முழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூலை 2026, 1:48 am IST
மாணவா் நிஷான்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை கண்மாய் நீரில் முழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே மீனம்பட்டி அம்பேத்காா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜூவின் மகன் நிஷான் (14). சிவகாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை நிஷான் பள்ளிக்குச் செல்லாமல் நண்பா்களுடன் சிவகாசி சிறுகுளம் கண்மாயில் குளிகக்கச் சென்றாா். அப்போது, நீச்சல் தெரியயாததால் நிஷான் தண்ணீரில் முழ்கினாா். இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தண்ணீரில் மூழ்கிய நிஷானை மீட்டு, முதலுதவி செய்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments