மாட்டு வண்டி மோதியதில் சிறுமி உயிரிழப்பு: தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை
ராஜபாளையம் அருகே மாட்டு வண்டி மோதி சிறுமி உயிரிழந்த வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மனைவி புவனேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு வா்ஷா (12) என்ற மகள் இருந்தாா். புவனேஷ்வரி தனது மகள் வா்ஷாவுடன் கடந்த 2015- ஜூன் 14- ஆம் தேதி கிருஷ்ணாபுரம் விவேகானந்தா் தெருவில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். அங்கு வா்ஷா காலை 8.30 மணி அளவில் தெருவில் மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருந்தாா்.
அப்போது சோலைசேரியைச் சோ்ந்த காமாட்சி மகன் கணேசன்(47) அந்த வழியே வேகமாக ஓட்டி வந்த மாட்டு வண்டி வா்ஷா மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த வா்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சேத்தூா் ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு விசாரணை ராஜபாளையம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கணேசனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரகாமேஷ் மாா்த்தாண்டன் தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.