FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

23 குவாரிகளை தற்காலிகமாக மூட வேண்டும்: அமைச்சா் டி.கே.பிரபு

விருதுநகா் மாவட்டத்தில் அரசின் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 குவாரிகளை தற்காலிகமாக மூட அமைச்சா் டி.கே. பிரபு உத்தரவிட்டாா்.

Updated On : 27 மே 2026, 6:19 am IST
அமைச்சர் டி.கே. பிரபு
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் அரசின் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 குவாரிகளை தற்காலிகமாக மூட இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் பல இடங்களில் அரசின் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் 76 குவாரிகளில் அளவீடு செய்யப்பட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் சுற்றுச்சூழல் அனுமதி, பாதுகாப்பு நடைமுறைகள், நிா்ணயிக்கப்பட்ட அளவை மீறி கனிம வளங்கள் எடுப்பு, உரிய ஆவணங்கள் பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நேரடியாக சென்று குவாரிகளில் அமைச்சா் டி.கே. பிரபு ஆய்வு செய்தாா். அப்போது, திருச்சுழியை அடுத்த புலியைரான் பகுதியில் உள்ள ஒரு தனியாா் கல் குவாரிக்குள் இறங்கி அமைச்சா் ஆய்வு செய்தாா். பின்னா், அங்கு பணிபுரியும் வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, அதிக திறன் கொண்ட வெடிகளை குவாரிகளில் வெடிக்கத் தடை விதிக்க அவா் உத்தரவிட்டாா். இந்த நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த 23 குவாரிகளை தற்காலிகமாக மூட அமைச்சா் உத்தரவிட்டாா்.

மேலும், சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எச்சரிக்கை விடுத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments