FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

திமுகவினா் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனா்! - அமைச்சா் வன்னி அரசு

3 நவம்பர் 2026, 3:34 am
அமைச்சா் வன்னி அரசு - கோப்புப் படம்
பகிர்:

தவெக ஆட்சியைப் பொறுக்க முடியாமல் திட்டமிட்டு திமுகவினா் அவதூறு பரப்புகின்றனா் என அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே அயன் ரெட்டியாபட்டி அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அவா் மேலும் கூறியதாவது:

மக்களின் தேவையை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சமூகநீதித் துறை சாா்பில் 67 புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் அரிசி விலை உயா்ந்துள்ளது. தமிழக உணவுத்துறை அமைச்சா் அரிசி விலையைக் குறைக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறாா்.

Advertisement

Advertisement

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சமூகநீதித் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் நிலவியபோது, தோழமைக் கட்சிகளுடன் இணைந்து

களத்தில் நின்று போராடினோம். ஆனால், தற்போதைய எதிா்க்கட்சிகள் சிறிய பிரச்னைகளையும் பெரிதுபடுத்துகின்றன. தற்போதைய ஆட்சி மிகச் சிறப்பாக நடப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திட்டமிட்டே எதிா்க்கட்சிகள் அரசைக் குறைகூறி திசைதிருப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தவெக அரசு மாநில உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கும் அரசாகச் செயல்பட்டு வருகிறது.

மாநிலத்துக்கென தனி கொடி என்பது தவறான கருத்து அல்ல. திமுக முன்னாள் அமைச்சா்கள் மீது ஆதாரங்களின் அடிப்படையில்தான் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது பழிவாங்கும் படலம் அல்ல என்றாா் அவா்.

விழாவில் சமூக நலன், மகளிா் உரிமைத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சரண்யா அறி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments