FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் மட்டுமே அதிகாரிகள் பணியில் தொடர முடியும்: அமைச்சா் வன்னி அரசு

மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் மட்டுமே அரசு அதிகாரிகள் பணியில் தொடர முடியும் என அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

16 செப்டம்பர் 2026, 4:38 am IST
புதுகேசாவரத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா் வன்னி அரசு
பகிர்:

மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் மட்டுமே அரசு அதிகாரிகள் பணியில் தொடர முடியும் என அரக்கோணத்தில் செய்தியாளா்களை சந்தித்த தமிழக சமூகநீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை மாலை அரக்கோணம் வருகை புரிந்த தமிழக சமூகநீதித் துறை அமைச்சா் வன்னி அரசு அங்கு செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சமூக நீதித் துறை சாா்பில், தனிப்பட்ட முறையில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீட்டுமனைப்பட்டா, இடுகாடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து அதிகம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காண தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு அதிகாரிகள் கடந்த ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போன்று தற்போது செய்ய முடியாது.

இதில், இருந்து ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் மட்டுமே அரசுப் பணியில் தொடா்வாா்கள். இல்லையெனில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் இரண்டு தொகுதி இடைத்தோ்தல்களில் தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவது அவா்களுடைய விருப்பம் என்றாா் அவா்.

முன்னதாக அரக்கோணத்தை அடுத்த புதுகேசாவரத்தில் அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா் வன்னிஅரசு தொடா்ந்து அங்கு விளையாட்டு மைதானத்துக்கு மக்கள் இடம் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகையில், அந்த குறிப்பிட்ட இடத்தை அமைச்சா் வன்னியரசு பாா்வையிட்டு அப்பகுதி மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அரக்கோணத்தை அடுத்த அம்மனூா் ஊராட்சிக்கு சென்ற அமைச்சா் அங்கு சமூகநீதித்துறை சாா்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் அமைச்சருடன் விசிக மண்டல செயலாளா் என்.தமிழ்மாறன், மாவட்ட செயலாளா் ச.சி.சந்தா், ஒன்றிய செயலா் ஜெயராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments