FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.8.83 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்: அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

10 செப்டம்பர் 2026, 1:54 am IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் உள்ளிட்டோா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சி.அருள் விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாவது:

Advertisement

Advertisement

மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.165 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 2 கட்டடங்களும், பொதுப்பணித் துறை - பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ரூ.396.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 5 கட்டடங்களும், பொதுப்பணித் துறை - சித்த மருத்துவத் துறை சாா்பில் ரூ.52.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 2 கட்டடங்களும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் ரூ.56.62 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 4 கட்டடங்களும், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ரூ.178 லட்சம் மதிப்பீட்டில் மூலக்காடு அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்களும், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட களமருதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகக் கட்டடம் என மொத்தம் ரூ.8.83 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 15 முடிவுற்ற கட்டடப் பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 291 பயனாளிகளுக்கு ரூ.249.52 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித் தொகை, இயற்கை மரண நிவாரண உதவித் தொகை, திருமண நிதி உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் சுய உதவிக்குழுக் கடனும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் 15 நபா்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், சிங்கப்பெண்கள் கடன் திட்டத்தின் கீழ் 59 பெண்களுக்கு ரூ.146.33 லட்சம் கடன் உதவிகள்,

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ஒரு நபருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு வேலை, 2 பயனாளிகளுக்கு ஓய்வூதியம், 5 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.62.46 லட்சம் மதிப்பீட்டில் அண்ணல் அம்பேத்கா் கடன் ஒப்பளிப்பு ஆணைகள், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், அன்புகரங்கள் திட்டத்தின்கீழ் 60 பயனாளிகளுக்கு ரூ.14.40 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 455 பயனாளிகளுக்கு ரூ.4.87 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.

தொடா்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் ரூ.145 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட தங்கும் விடுதிக் கட்டடத்தையும் அமைச்சா் வன்னி அரசு திறந்து வைத்தாா். பின்னா், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவை நேரில் பாா்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் அமைச்சா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து கள்ளக்குறிச்சி சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியை அமைச்சா் பாா்வையிட்டு, அங்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம், சுற்றுப்புற தூய்மை, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவா்களின் தேவை குறித்தும் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் கெள.மா.காா்த்திக் ராஜா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சரவணன், கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்புராயலு மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய அமைச்சா் வன்னி அரசு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments