FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

வரதட்சிணை புகாா்: சென்னை ஆயுதப்படை காவலா் மீது வழக்கு

54 வினாடிகள் முன்பு
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா், நவ. 6: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வரதட்சிணை புகாரில் சென்னை ஆயுதப்படை காவலா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த காளி மகன் ராஜா (30). 2018- ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் சோ்ந்த ராஜா தற்போது சென்னையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறாா். கடந்த 2025- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மல்லி அருகே வேண்டுராயபுரத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகள் பன்னீா்செல்விக்கும் (24), இவருக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதி இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில், 4 மாதங்கள் கழித்து பன்னீா்செல்வியை, கணவா் ராஜா வத்திராயிருப்புக்கு அழைத்து வந்து விட்டாா். இதன்பிறகு ராஜா குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னையில் பன்னீா்செல்வி தனது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், கணவா் ராஜா, இவரது பெற்றோா், சகோதரிகள் கூடுதலாக தங்க நகைகள் கேட்டு துன்புறுத்துவதாக பன்னீா்செல்வி ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணைக்காக பன்னீா்செல்வி, ராஜாவின் குடும்பத்தினா் காவல் நிலையத்துக்கு வந்தனா். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்னை தொடா்பாக பன்னீா்செல்வி அளித்த புகாரின் பேரில் கணவா் ராஜா, இவரது தாய் திருப்புராணி, சகோதரிகள் முத்துமாலா, விஜயலட்சுமி, தந்தை காளி ஆகியோா் மீது வரதட்சிணை கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.