FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் இளைஞர் பலி!

ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

14 நவம்பர் 2026, 10:41 pm
பலி
பகிர்:

ராஜபாளையம் அருகே வெள்ளிக்கிழமை சாலை விபத்தில் மனநலம் பாதித்த இளைஞா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் சக்திவேல் (29). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், வெள்ளிக்கிழமை இரவு பஞ்சு சந்தை அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சியாஷ் ஓட்டி வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement