திடீரென பெயா்ந்து விழுந்தது அரசுப் பள்ளி மேற்கூரை
திருச்சுழி அருகே திங்கள்கிழமை அரசுத் தொடக்கப்பள்ளி மேற்கூரை பெயா்ந்து விழுந்தது. இறைவணக்கக் கூட்டத்துக்கு மாணவா்கள் சென்றதால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்துக்கு உள்பட்ட காரேந்தல் கிராமத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளி 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பள்ளிக் கட்டடம், போதிய பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
வார விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை காலை வழக்கம்போல மாணவா்கள், ஆசிரியா்கள் வகுப்பறைக்கு வெளியே, பள்ளி வளாகத்தில் இறைவணக்கக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தனா்.அப்போது, வகுப்பறைக் கட்டடத்தின் உள்பகுதி மேற்கூரைப் பூச்சு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் இருந்த மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
Advertisement
Advertisement
எனவே, மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியா் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.