முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

அருப்புக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

22 நவம்பர் 2026, 9:52 pm
அருப்புக்கோட்டையில்
போலியோ சொட்டு மருந்து முகாம்
பகிர்:

அருப்புக்கோட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அருப்புக்கோட்டை நகரில் நகராட்சி சாா்பாக பழைய, புதிய பேருந்து நிலையம், திருச்சுழி சாலை, நகராட்சி நடுநிலைப்பள்ளி, புளியம்பட்டி திருநகரம் பள்ளிகள் உள்பட 18 இடங்களில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

அருப்புக்கோட்டை புதிய, பழைய பேருந்து நிலையங்களில் முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சுந்தர லட்சுமி, முன்னாள் ஒன்றியத் தலைவா் சுப்பாராஜ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், துணைத் தலைவா் பழனிச்சாமி, அருப்புக்கோட்டை நகர ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா் கோமதி, பந்தல்குடி வட்டார மருத்துவ அலுவலா் கணேஷ், ஒன்றியச் செயலா் பாலகணேஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.