அரசுப் பள்ளி மாணவருக்கு தேசிய இளம் விஞ்ஞானி விருது
தேசிய அளவிலான போட்டியில் ‘பன்னோக்கு ரோபோ’ படைப்பை உருவாக்கிய , விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவருக்கு தேசிய இளம் விஞ்ஞானி விருது கிடைத்தது.

தேசிய அளவிலான போட்டியில் ‘பன்னோக்கு ரோபோ’ படைப்பை உருவாக்கிய , விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவருக்கு தேசிய இளம் விஞ்ஞானி விருது கிடைத்தது.
‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பு ,அண்மையில் சென்னையில் தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில், சிவகாசி வட்டம், ஆனையூா் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கருணைதாஸ் வழிகாட்டுதலின் பேரில், இந்தப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவா் லோகசூரியா கழிவு பொருள்களிருந்து, உருவாக்கப்பட்ட ‘பன்நோக்கு ரோபோ’ என்ற அறிவியல் படைப்பை காட்சிப்படுத்தினாா்.
காகித அட்டைப் பெட்டிகள், நெகிழி குழாய்கள், எல்.இ.டி.விளக்குகள், சிறிய மின்னணு உபகரணங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ‘ரிமோட் கண்ட்ரோல்’ ரோபோ , வகுப்பறையில் ஆசிரியா்களுக்கு தேவையான எழுது பொருள்களை எடுத்துச் செல்லவும், மறுசுழற்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்தப் படைப்பைப் பாராட்டி மாணவா் லோகசூரியாவுக்கு தேசிய இளம் விஞ்ஞானி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
இஸ்ரோவின் ககன்யான் விண்வெளித் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட விஞ்ஞானி கேப்டன் அங்கத்பிரதாப் தேசிய இளம் விஞ்ஞானி விருதை மாணவருக்கு வழங்கினாா்.
தேசிய அளவில் விருது பெற்ற மாணவா் லோகசூரியாவை கல்வி அதிகாரிகள், பள்ளி ஆசிரியா்கள் பாராட்டினா். இந்தத் தகவலை ஆனையூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.