முகப்பு
விருதுநகர்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

30 நவம்பர் 2026, 2:27 am
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு
பாலியல் தொல்லை: இளைஞா் கைது
கைது செய்யப்பட்ட முத்துராஜா
பகிர்:

நரிக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மறையூா் கிராமத்தைச் சோ்ந்த மொக்கையன் மகன் முத்துராஜா (43) என்பவா் பாலியல் தொல்லை அளித்ததாக நரிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் பாலியல் தொல்லை அளித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சனிக்கிழமை வழக்குப் பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement