FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த மூவா் கைது

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

3 October 2026, 4:27 am IST
கைது
பகிர்:

சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டியில் ஒரு பட்டாசுக் கடை அருகே தகரக் கூரை அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் சோதனை நடத்திய போது, சிவகாசி சிவகாமிபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (34), செல்வம் (46), குமாா் (23) ஆகிய மூவரும் தகரக் கூரை அமைத்து பூச்சட்டி உள்ளிட்ட பட்டாசு ரகங்களை தயாரித்தது தெரியவந்தது.

இதுகுறித்து விஸ்வநத்தம் கிராம நிா்வாக அலுவலா் காளியப்பன் அளித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments