FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பட்டாசு தயாரித்த இருவா் கைது

கைது
பகிர்:

சிவகாசி அருகே சட்டவிரோதமாக தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரித்த உள்ளூா் தொலைக்காட்சி உரிமையாளா் உள்பட இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலையில் கோணம்படடி விலக்கு அருகே தகரக் கொட்டகை அமைத்து இருவா் பேன்சிரக பட்டாசு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாா் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சிவகாசி உள்ளூா் தொலைக்காட்சி உரிமையாளா் அனந்தராஜ் (42), மாரியப்பன் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

அனந்தராஜ் தகரக் கொட்டகையை வாடகைக்கு எடுத்து அங்கு பேன்சிரக பட்டாசுகளை தயாரித்து வந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து பேன்சிரக பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments