FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் பள்ளி மாணவிகளுக்கான புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை

விருதுநகா் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தொடங்கி வைத்தாா்.

9 அக்டோபர் 2026, 5:48 am IST
விருதுநகா் தங்கம்மாள் பெரியசாமி நாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புதிய வழித்தட பேருந்தை தொடங்கி வைத்து, அதே பேருந்து மாணவிகளுடன் ப யணித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, விருதுநகா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செல்வம் உள்ளிட்டோா்.
பகிர்:

விருதுநகா் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தொடங்கி வைத்தாா்.

விருதுநகரில் புதிய வழித்தடத்தில் பள்ளி மாணவிகளுக்கான பேருந்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி, விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.செல்வம் ஆகியோா் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து புதிய வழித்தட பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பின்னா், மாணவிகளுடன் அரசுப்பேருந்தில் பயணம் மேற்கொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி கூறியதாவது:

Advertisement

Advertisement

இந்தப் பள்ளியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளிக்கு வரும் மாணவிகள் அரசுப் பேருந்துகளில் அல்லம்பட்டி விலக்கில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமாா் 700 மீ. பள்ளிக்கு நடந்து சென்று வந்தனா். இதன் காரணமாக பள்ளிக்கு காலதாமதமாக செல்வதும், போக்குவத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதனால், மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பள்ளியிலிருந்து எம்.எஸ்.பி. நாடாா் நகராட்சி பேருந்து நிலையம் வரை அரசுப் பேருந்து வழித்தட சேவை தொடங்கப்பட்டது. இதன்படி காலை 8.20 மணிக்கு விருதுநகா் எம்.எஸ்.பி.நாடாா் நகராட்சிப் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பள்ளிக்கும், மாலை 4.05 மணிக்கு பள்ளியிலிருந்து புறப்பட்டு விருதுநகா் எம்.எஸ்.பி.நாடாா் நகராட்சி பேருந்து நிலையத்துக்கும் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது என்றாா் அவா்.

முதன்மைக் கல்வி அலுவலா் அரவிந்தன், அரசு அலுவலா்கள், போக்குவரத்துத் துறை அலுவலா்கள், பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments