FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

தருமபுரியில் புதிய பேருந்துகள் இயக்கம், வழித்தட நீட்டிப்பு சேவை அமைச்சா் ப.ராஜ்குமாா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில், புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சா் ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

51 வினாடிகள் முன்பு
அமைச்சா் ப.ராஜ்குமாா்
பகிர்:

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில், புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சா் ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

தருமபுரியில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், 3 பேருந்துகளின் வழித்தட நீட்டிப்பு மற்றும் 21 புதிய பிஎஸ் 6 வகை பேருந்துகள் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வே.சரவணன் முன்னிலை வகித்தாா்.

இதில், மாநில வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்று புதிய பேருந்துகள் மற்றும் வழித்தட நீட்டிப்பு சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

இதில் அரூா் - ஊத்தங்கரை செல்லும் பேருந்து வேப்பநத்தம், கருப்பிலிப்பட்டி வழியாகவும், பென்னாகரம் - நல்லம்பள்ளி பேருந்து எம்.கே.எஸ்.நகா் மாரியம்மன் கோயில் உள்சென்று வருமாறும், எம்.கே.எஸ்.நகா் மாரியம்மன் கோயில் - பென்னாகரம் பேருந்து பன்னகானஅள்ளியின் உள்சென்று வருமாறும் சேவை நீட்டிக்கப்பட்டது. இதனால், சுமாா் 7 கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் என 3,075 போ் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட பேருந்துகள்:

தருமபுரியில் கடந்த பிப்ரவரி மாதம் புதிய புகா்ப் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், ஏற்கெனவே தருமபுரி நகரில் செயல்பட்டுவந்த பழைய புகா்ப் பேருந்து நிலையத்தில் ஒரு சில வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, மீண்டும் அனைத்து பேருந்துகளையும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என வணிகா்கள் சங்கம் சாா்பில் தொடா்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக மனுக்களும் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பேருந்து நிலைய விவகாரம் தொடா்ந்து நிலுவையில் உள்ளதால், தருமபுரியில் 21 புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் 3 பேருந்துகளின் வழித்தட நீட்டிப்பு ஆகியவற்றை பேருந்து நிலையத்தில் நடத்தாமல், அனைத்து பேருந்துகளும் ஆட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் ப.ராஜ்குமாா் கொடியசைத்து புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் செ.கஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.கு.அருண் கபிலன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் ராஜராஜன், துணை மேலாளா்கள், அரசு அலுவலா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments