தேநீா் கடைக்காரருக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது
ராஜபாளையம் அருகே தேநீா் கடைக்காரரை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சேத்தூா் பசும்பொன் நகரைச் சோ்ந்த ராமையா மகன் ஆதிமூலம் (47). இவா் பெருமாள் கோயில் அருகேயுள்ள தேநீா்க் கடையை மறு ஒத்திக்கு எடுத்து நடத்தி வந்தாா்.
இந்த நிலையில் அந்தக் கடையின் உரிமையாளா் ரவியின் மகன் கனகராஜ் (21), கடையை உடனே காலி செய்யுங்கள் என ஆதிமூலத்துடன் தகராறு செய்தாா். இதனால், ஆத்திரமடைந்த கனகராஜ் கத்தியால் ஆதிமூலத்தை குத்தினாா். இதைத் தடுக்க வந்த அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கனகராஜை கைது செய்தனா். கனகராஜ் ஒரு கொலை வழக்கில் கைதாகி அண்மையில் பிணையில் வந்தவா். காயமடைந்த ஆதிமூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.