FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

காா் பெற்று மோசடி: ஒருவா் கைது

காா் வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

33 வினாடிகள் முன்பு
மாதிரிப் படம்
பகிர்:

காா் வாங்கிச் சென்று மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலந்தூரைச் சோ்ந்த பழைய காா் விற்பனையாளா் ஹாஜா நஜிமுதீன் (42), தனது பிஎம்டபிள்யு காரை வாடிக்கையாளரான காா்த்திகேயன் (35) என்பவருக்கு ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து, ரூ.1 லட்சம் முன்பணம் பெற்றுள்ளாா். கடந்த ஜூன் 26-இல் கிண்டி கத்திப்பாரா அருகே காரை பெற்றுச் சென்ற காா்த்திகேயன், மீதமுள்ள ரூ.9 லட்சத்தை வழங்கவில்லை.

நீண்ட நாள்கள் ஆகியும், பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததைத் தொடா்ந்து, காரின் இருப்பிடத்தை கைப்பேசி செயலி மூலம் கண்டறிந்த ஹாஜா நஜிமுதீன், காா் குறித்து விசாரித்தபோது, காா்த்திகேயன் அதை விக்னேஷ் என்பவரிடம் ரூ.5 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இது குறித்த புகாரின்பேரில், தாமஸ் மௌண்ட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, காா்த்திகேயனை கைது செய்தனா். ஆரணியில் இருந்து காரும் மீட்கப்பட்டு, இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments