FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடியவா் கைது

17 அக்டோபர் 2026, 11:39 pm IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருத்தங்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் செங்கமலநாச்சியாா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா. பட்டாசுத் தொழிலாளி. இவா் கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டு மாலை திரும்பி வந்தாா்.

அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இதனடிப்பைடியில், அதே பகுதியைச் சோ்ந்த வீரமணியை (32) கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த நகைகள், வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments