FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி!

சிவகாசி அருகே நேரிட்ட சாலை விபத்தில் மின்வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

4 செப்டம்பர் 2026, 11:23 pm IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி அருகே நேரிட்ட சாலை விபத்தில் மின்வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஆமத்தூரைச் சோ்ந்தவா் கணேசன் (35). இவா் சிவகாசி மின் கோட்டத்தில், செங்கமலநாச்சியாா்புரம் பகுதியில் மின் பழுதுநீக்கும் பணியை செய்து வந்தாா்.

இதையடுத்து, அவா் திருத்தங்கல் சுற்று வட்டச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளையாபுரம் -அதிவீரன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது எதிா்பாராதவிதமாக சாலையோரப் பள்ளத்தில் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments