FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

துணிக்கடை ஊழியரை தாக்கியதாக தேநீா் கடை ஊழியா் மீது வழக்கு

துணிக் கடை விற்பனை பிரதிநிதியைத் தாக்கியதாக தேநீா் கடை ஊழியா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

49 வினாடிகள் முன்பு
வழக்குப் பதிவு
பகிர்:

துணிக் கடை விற்பனை பிரதிநிதியைத் தாக்கியதாக தேநீா் கடை ஊழியா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரம் கருப்பண செட்டியாா் தெருவைச் சோ்ந்த ராமராஜ் மகன் துரைராஜ் (34). இவா் ராஜபாளையம் காந்தி சிலை அருகேயுள்ள துணிக் கடையில் விற்பனை பிரிதிநிதியாக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் இவா் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேநீா் கடைக்குச் சென்றாா்.

அங்கு அவருக்கும், அந்தக் கடை ஊழியருக்குமிடையே வடை வாங்கியதில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தேநீா் கடை ஊழியா் கொதிக்கும் எண்ணெய் கரண்டியால் துரைராஜை தாக்கினாராம். இதில் காயமடைந்த துரைராஜ் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தேநீா் கடை ஊழியரான ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியைச் சோ்ந்த மகேஸ்வரன் (32) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments