FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு

7 செப்டம்பர் 2026, 3:11 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் வளாகத்தின் கிழக்குப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க நபா் இறந்து கிடப்பதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில் இறந்த நபா் ராஜபாளையம் அருகேயுள்ள ஆவரம்பட்டி கல்யாண சுந்தரனாா் தெருவை சோ்ந்த சின்னச்சாமி என தெரிய வந்தது. அவா் இறந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments