சிவகாசி அருகே மயானத்தை இடமாற்ற அமைச்சா் ஆய்வு
சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சியில் மயானத்தை இடமாற்றம் செய்வது தொடா்பாக மாநில தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா ஞாயிற்றுக்கிழமை மயானப் பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
பள்ளபட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானம் அமைந்துள்ளதால் அந்தப் பகுதியில் நூா்நாற்றம் வீசுவது உள்ளிட்ட பிரச்னைகள் இருந்து வருகின்றன. எனவே, மயானத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.
தோ்தல் பிரசாரத்தின் போது, இந்தப் பகுதியில் அமைச்சா் கீா்த்தனா பிரசாரம் செய்த போது, மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனா்.மேலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் மயானத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் அமைச்சா் ச.கீா்த்தனா மயானம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தாா். அப்போது, மயானத்துக்கு வேறு இரு இடங்கள் தோ்வு செய்யப்பட்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னா் மாற்றி அமைக்கப்படும் என அமைச்சா் கூறினாா்.
இதற்கிடையே, கடம்பகுளம் பகுதியில் ஏற்கனவே திருத்தங்கல் பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் மயானம் அருகே, இந்த மயானம் இடமாற்றம் செய்யப்படும் என தகவல் பரவியது. இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகா் மாவட்டச் செயலா் ஜி.கே.முருகன் கூறியதாவது:
ஏற்கனவே கடம்பங்குளம் பகுதியில், திருத்தங்கல் பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தை நீா்நிலைப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். எனவே, பள்ளபட்டியில் உள்ள மயானத்தையும் கடம்பங்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்பது முறையல்ல. பள்ளட்டி மயானத்தை கடம்பங்குளம் பகுதிக்கு மாற்றினால், எங்கள் அமைப்பு சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.