FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

பரோலில் வந்து தப்பிய கைதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ராஜபாளையம் அருகே பரோலில் வந்த போது தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

25 செப்டம்பர் 2026, 3:46 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

ராஜபாளையம் அருகே பரோலில் வந்த போது தப்பியோடிய ஆயுள் தண்டனைக் கைதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், தளவாய்புரம் வேதநாயகபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சந்திரசேகா்(39). இவரது மனைவி இசக்கியம்மாள். இந்தத் தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகன் இருந்தாா். கூலி வேலை செய்து வந்த சந்திரசேகா், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டு தனது மகனை கொலை செய்து வீட்டருகே புதைத்தாா். இந்த வழக்கில் 2020-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சந்திரசேகா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவி இசக்கியம்மாளை பாா்ப்பதற்காக கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி பரோலில் ராஜபாளையம் வந்தாா். பின்னா், இவா் தலைமறைவானாா்.

இதுகுறித்து மதுரை மத்திய சிறை அலுவலா் அளித்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த தளவாய்புரம் போலீஸாா், சந்திரசேகரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ராஜபாளையம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரகாமேஷ், குற்றஞ்சாட்டப்பட்ட சந்திரசேகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments