ஹனிமூன் தெரியும், அது என்ன பேபிமூன்? சமந்தா சென்றிருக்கிறாரே..
ஹனிமூன் தெரியும், அது என்ன பேபி மூன் என்றால், சமந்தா சென்றிருக்கிறாரே அதுதான்.
ஹனிமூன் என்றால், திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் வெளியூர் அல்லது வெளிநாடு சென்று, தங்களது திருமண வாழ்க்கையை இனிதே தொடங்கும் காலமாகும். ஆனால், தற்போது பேபிமூன் பற்றிய தகவல்களும் வரத் தொடங்கியிருக்கின்றன.
மிகப்பெரிய நட்சத்திரங்கள் தங்களது கர்பக் காலத்தில் வெளிநாடு சென்று, அதற்கென பிரத்யேக வசதிகொண்ட நட்சத்திர விடுதிகளில் தங்கி, கர்பக் காலத்தைக் கொண்டாடுவதைத்தான் பேபி மூன் என்கிறார்கள்.
தற்போது நடிகை சமந்தா, தன்னுடைய கணவர் ராஜ் உடன் பேபிமூன் கொண்டாட தாய்லாந்து சென்றிருக்கிறார். அவர் அங்கிருந்து வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக தற்போது பேபி மூன் பிரபலமாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
அதாவது, கர்பக் காலத்தில் மிகவும் ஓய்வாக நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, தியாகம், சிகிச்சைகள் கிடைக்கும் வகையில் வெளிநாடுகளில் பல நட்சத்திர விடுதிகள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து, தமக்கு ஏற்ற வசதிகளை முன்கூட்டியே பதிவு செய்து தம்பதியர் அங்குச் சென்று சில நாள்கள் முதல் வாரங்கள் வரை தங்கியிருப்பார்களாம்.
கர்பக் காலத்தில் பேபி மூன் செல்வதற்கு ஏற்ற காலம் என்றால் அது முழுமையாக மூன்று மாதங்கள் முடிந்து 14வது வாரம் முதல் 28வது வாரம் வரை என்கிறார்கள். இந்தக் காலத்தில்தான் காலையில் உடல் சோர்வு போன்ற கர்பக் கால அறிகுறிகள் கர்பிணிகளைத் தாக்கும். இந்த நேரத்தை கர்பிணிகள் நல்ல முறையில் செலவிடச் செய்வதே பேபிமூன் செல்லக் காரணம்.
எதற்காக பேபி மூன்?
குழந்தை பிறந்ததும் பெற்றோர் குறிப்பாக தாய், குழந்தையைப் பராமரிப்பதிலேயே நேரம் செலவிட வேண்டியது இருக்கும். எனவே, தம்பதியர் தங்களை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளவும் கர்பக் காலத்தை இனிமையாக்கவும், கருவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்க பேபிமூன் அவசியமாகிறது.
வழக்கமான செயல்பாடுகள்
ஆரோக்கியமான உணவு நேரத்துக்கு நேரம் வழங்கப்படும். கடற்கரை அல்லது இயற்கை எழில்கொஞ்சும் இடங்களுக்கு அருகே அமைந்திருக்கும்.
நிபுணத்துவம் பெற்றவர்களால் மசாஜ் செய்யப்படும்.
இசை சிகிச்சையளிக்கப்படும்
யோகா மற்றும் தியான பயிற்சி
நிம்மதியான உறக்கம், நண்பர்கள், உறவினர்களை சந்திக்க வசதி என அனைத்தும் கொண்டதாகவே இருக்கும்.
இது அவரவர் தேவை மற்றும் விருப்பத்துக்கு ஏற்ப அமையும். ஒரு நாளைக்கு 75 ஆயிரம் முதல் பல லட்சங்கள் வரை கூட கட்டணமாக வசூலிக்கப்படுமாம்.
கர்பிணியின் உடல்நிலையை பொருத்தே பேபிமூன் செல்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். கர்பிணியின் பயண விவரங்கள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒருவேளை!
திருமணமாகி ஏதேனும் சூழ்நிலையால் ஹனிமூன் போகாதவர்கள், பேபி மூன் போகலாம். நினைவில் கொள்ளுங்கள்.
We know what a honeymoon is, but what is a 'babymoon'? Samantha has gone on one...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.