FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்பவரா? இந்த 14 தளங்களை தவிர்த்திடுங்கள்! ஐஆர்சிடிசி அறிவுரை

ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்பவராக இருந்தால் இந்த 14 தளங்களை தவிர்த்திடுங்கள் என ஐஆர்சிடிசி அறிவுரை

25 வினாடிகள் முன்பு

A vendor sells fried snacks on a train in northern India. Food vendors are a regular presence on most trains, jumping on and off trains at various - Center-Center-Delhi

பகிர்:

ரயிலில் வெளி மாவட்டம் அல்லது வெளியூர் செல்லும்போது, உணவுகளை செயலி அல்லது இணையதளங்கள் வாயிலாக ஆர்டர் செய்யும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை ஐஆர்சிடிசி வெளியிட்டுளள்து.

ரயில் சென்று கொண்டிருக்கும் பாதையை பதிவிட்டால், செல்போன் மூலம் உணவு ஆர்டர் செய்து உரிய ரயில் நிலையத்தில் உணவைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இதில் ஒரே ஒரு தவறு நேர்ந்தாலும் உணவும் கிடைக்காது, பணமும் வீணாகிவிடும்.

Advertisement

Advertisement

எனவே, ஐஆர்சிடிசி மோசடியான இணையதளங்கள் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை மோசடியான அல்லது அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள் என்றும், இவற்றை உண்மை என நம்பி உணவு ஆர்டர் செய்துவிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவற்றில், தரமற்ற உணவுகளை விநியோகிக்கும் இணையதளங்களும் அடங்கும். ஆனால், இவை அனைத்தும் ஏற்கனவே அங்கீகாரம் பெற்ற உணவு ஆர்டர் இணையதளங்கள் போலவே இருப்பதால் மக்கள் மிக எளிதாக ஏமாறும் வாய்ப்பும் உள்ளதாம்.

இந்த பட்டியலில் இருக்கும் 14 இணையதளங்கள் பட்டியல்....

1. RAILRESTRO.COM

2. RAILRESTRO.IN

3. RAILMITRA.COM

4. RAILFOOD.NET

5. RAILMEAL.COM

6. DIBRAIL.COM

7. TRAVELKHANA.COM

8. TRAVELERFOOD.COM

9. TRAINWAY.IN

10. TRAINSCAFE.COM

11. TRAINMENU.COM

12. FOODONTRACK.IN

14. KHANAONLINE.IN

14. ECATERING.APP

மேற்கண்ட இணையதளங்கள் வாயிலாக உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உணவு ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் ஐஆர்சிடிசியின் ecatering.irctc.co.in என்ற இணையதளத்தில் உங்கள் பிஎன்ஆர் எண் கொடுத்தோ அல்லது Food and Track என்ற செயலி மூலமாகவோ உணவு ஆர்டர் செய்து பெறலாம்.

இணையதள வசதி இல்லாதவர்கள் 1323 எண்ணுக்கு அழைத்து உணவு ஆர்டர் கொடுக்கலாம். இது தவிர ஸொமாட்டோ, ஸ்விக்கி, ஸூப், ரயில் யாத்ரி, ரயில் ரெசிபி போன்ற செயலிகள் வாயிலாகவும் உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

summary

Are you traveling by train? Here are 14 platforms! Rachel’s Advice

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.