FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மிக மோசமான டெட் லைனை நெருங்கும் பூமி! இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை!

புவியின் சராசரி வெப்பநிலையானது மிக மோசமான வரம்பான 1.5 டிகிரி செல்சியஸ் என்பதை நெருங்குவது பற்றி..

3 செப்டம்பர் 2026, 12:42 pm IST
பூமி - ANI
பகிர்:

புவியின் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அபாய அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இயற்கைப் பேரிடர்களால் மனித குலம் பேரழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட உலகளாவிய வெப்பமயமாதலின் முக்கியமான வரம்புதான் 1.5 டிகிரி செல்சியஸ் அளவாகும்.

இது 1850 மற்றும் 1900-க்கு இடைப்பட்ட காலத்துடன் ஒப்பிடுகையில், பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை தொடர்ந்து அளவிட்டு வரும் விஞ்ஞானிகள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்பதை அடைவது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதனை வரம்பாக அறிவித்திருந்தனர்.

Advertisement

Advertisement

எப்போதும் சொல்வது போல இது ஏதோ வெப்பநிலை குறித்த சாதாரண எச்சரிக்கையல்ல, இந்த வரம்பு என்பது 20 ஆண்டுகால உலகளாவிய சராசரி அதிகரிப்பைக் குறிக்கிறது; மாறாக, வெப்பமான ஒரு மாதம் அல்லது ஆண்டு பற்றிய தகவல் அல்ல.

அதோடு, வெறும் 1.5 டிகிரி செல்சியஸ்தானே என சாதாரண மக்களும் சரி படித்தவர்களும்கூட நினைக்கலாம். காரணம், இன்று சென்னையில் 30 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. அடுத்த வாரம் 10 டிகிரி வரை கூடி 40 டிசிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்தாலும்கூட நாம் தாங்கிக் கொள்கிறோம் என்று கணக்கிடுவோம்.

ஆனால், உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் நுழையப்போகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிப்பது அதற்கும் மேல்.

பூமி உருவாகி 400 கோடி ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. பூமி தோன்றியபோது இருந்த வெப்பநிலை, மழை அளவு என எதுவுமே இப்போது இல்லை. இதற்குக் காரணமாக படிப்படியாக மனிதன் செய்த மாற்றங்கள்தான்.

சரி, தற்போது புவியின் சராசரி வெப்பநிலை எவ்வளவு என்றால், 1.4 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. 2015ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகள் உலகின் சராசரி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்பதைத் தொடுவதற்குள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.

ஆனால், தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை தொட்டுவிடும், அதனை தடுக்கவியலாது என்பதே.

சரி, பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்தால் என்னவாகும் என்ற கேள்விக்கு, அதனால் நிகழும் மாற்றங்களை மக்களால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது என்கிறாக்ள்.

அதாவது, பூமி தன்னுடைய சராசரி வெப்பநிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும். பூமியில் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதன் வெப்பநிலைக்கு ஏற்ப புயலை உருவாக்கும், சூறாவளிகள் உருவாகும், பனிப்பாறைகள் உருகும், இனி மழை என்றே பெய்யாது, அதி தீவிர கனமழைதான். மனிதன் இனி என்ன நினைத்தாலும் இந்த மாற்றங்களை தடுக்க முடியாது.

சரி, இன்று 1.5 டிகிரி செல்சியஸை அடைந்துவிடுவோம், பிறகு அது நின்றுவிடப்போகிறதா, இல்லை அடுத்து 2 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்து, அதே வேகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை மாறிவிடும். ஆனால் என்ன அதன் பிறகு மனிதன் கவலைப்பட எதுவும் இருக்காது, மனிதனும் இருக்க மாட்டான் என்றே கருதலாம்.

summary

Earth is approaching a critical deadline There is nothing left to say

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments